ஒரு கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன
ஒரு கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதில் 1,264,000 தடுப்பூசிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் 7,100,000 சினோபார்ம் தடு;ப்பூசிகளும், 180,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளும், 128,700 பைசர் தடுப்பூசிகளும், 1,500,000 மொடர்னா தடுப்பூசிகளும் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
இவற்றில் 3,364,100 தடுப்பூசிகள் நன்கொடையாக கிடைக்கப் பெற்றுதுடன் 6,808,700 தடுப்பூசிகள் பணம் கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும்வாரங்களில் 5,600,000 சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறவுள்ளதுடன், 1,470,000 அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் ஜப்பானின் நன்கொடையாக கிடைக்கப் பெறவுள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் இந்த தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 7,573,967 தடு;ப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் மட்டும் 215641 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
