ஹோட்டல் ஒன்றிலிருந்து 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது
இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் புத்தளத்தில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழுவில் 44 ஆண்களும் 09 பெண்களும் உள்ளடங்குவதாக பதில் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகநபர்கள் இயங்கி வந்ததாக தெரிவித்த அவர், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பொலிஸார் அந்த ஹோட்டலை சுற்றிவளைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபர்களிடம் விசாரணை
இந்தச் சோதனையின் போது 98 கையடக்கத் தொலைபேசிகள், 44 கணனிகள் மற்றும் பல ஐ.எஸ்.எம் அட்டைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 10 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri