50க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி சபைகள் இன்னும் அமைக்கப்படவில்லை! வெளியான காரணம்
நாட்டில் இன்னமும் 50க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் புதிய மேயர்கள் மற்றும் தவிசாளர்களின் கீழ் சபைகள் அமைக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிடத் தவறியமை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளே இதற்கான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபை
பெண் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினையால், புத்தளம் வண்ணாத்தவில்லு பிரதேச சபையால் இன்னும் ஒரு சபையை அமைக்க முடியவில்லை.

சில சபைகளுக்கு உறுப்பினர்கள் வேண்டுமென்றே வருகையைத் தவிர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025 மே 6 ஆம் திகதியன்று, 337 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அதில், 8,000 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri