நாட்டில் கோவிட்டால் இறப்போர் எண்ணிக்கை 250ஐ தாண்டியுள்ளது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
இலங்கையில் தினமும் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும், இறப்போரின் எண்ணிக்கை 250ஐ தாண்டியுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோவிட் டெல்டா திரிபு மிக வேகமாக பரவி வருவதால், அடுத்த சில தினங்களில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கலாம் என அந்த சங்கத்தின் உதவி செயலாளர் மருத்துவர் நவீன் டி சொய்ஸா கூறியுள்ளார்.
இந்த நிலைமையை குறைக்க தடுப்பூசி வழங்கப்பட வேண்டியவர்களின் முன்னுரிமை பட்டியலை தமது சங்கம் முன்வைத்த போதிலும் வெளியிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாக அது சரியாக நடப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி வழங்கும் முறையை சரியாக மேற்கொண்டால், சனத் தொகையில் 45 வீதமானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி இருக்கலாம். அப்போது இறப்போரின் எண்ணிக்கை குறையும் எனவும் நவீன் டி சொய்ஸா குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




