தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 25 முறைப்பாடுகள் பதிவு
புதிய இணைப்பு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 25 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலேயே குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையத்திற்கு 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி தேர்தல் அத்துமீறல்கள் தொடர்பில் ஜூலை 31ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 09ஆம் திகதி வரையான காலப்பகுதியில், மொத்தம் 268 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் ஊடக அறிக்கையின்படி, அனைத்து முறைப்பாடுகளும் சட்ட மீறல்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதில் ஒரு வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு
தேர்தல் முறைப்பாட்டு மேலாண்மைக்கான தேசிய மையத்துக்கு 189 முறைப்பாடுகளும் தேர்தல் முறைப்பாட்டு மேலாண்மைக்கான மாவட்ட மையங்களுக்கு 80 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
இந்தநிலையில் நியாயமானதும் வெளிப்படையானதுமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இந்த முறைப்பாடுகளை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
