திடீர் புயலால் இரத்து செய்யப்பட்ட ஆயிரக் கணக்கான விமானங்கள்
குளிர்கால டெவின் புயல் காரணமாக அமெரிக்காவில் 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டு தாமதமாகிவிட்டதாக விமான கண்காணிப்பு வலைத்தளமான ஃப்ளைட்அவேர் தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட காலத்தில் இவ்வாறான ஒரு அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளமை விமானப் பயணத்தில் ஒரு பெரும் அடியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டெவின் புயல்
நேற்றைய தினம், 40 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு குளிர்கால புயல் எச்சரிக்கைகள் மற்றும் வானிலை ஆலோசனைகளின் வழங்கப்பட்டிருந்தன.

மேலும், நியூயோர்க் நகரம் வெள்ளிக்கிழமை இரவு 250 மிமீ (10 அங்குலம்) வரை பனிப்பொழிவை எதிர்கொண்டது, இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமானது என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க விமான நிறுவனங்களில் அதிகபட்சமாக ஜெட் ப்ளூ ஏர்வேஸ் 225 விமானங்களை இரத்து செய்தது, அதைத் தொடர்ந்து டெல்டா ஏர் லைன்ஸ் 212 விமானங்களை இரத்து செய்தது.
ரிபப்ளிக் ஏர்வேஸ் 157 விமானங்களையும், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 146 விமானங்களையும், யுனைடெட் ஏர்லைன்ஸ் 97 விமானங்களையும் இரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.