அரச வேலைவாய்ப்பு என்று சிந்திக்கின்ற மனநிலை மாற வேண்டும்: சிறிமோகன்(Photo)

Kilinochchi Government Employee
By Erimalai Mar 22, 2023 08:08 PM GMT
Report

கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழில் தேடுநர்கள் உள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தொழிற்சந்தை நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் புள்ளிவிபரம் 

அவர் மேலும் குறிப்பிடுகையில், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் புள்ளி விபரத்திற்கு அமைவாக 2400க்கு மேற்பட்ட தொழில் தேடுநர்கள் இருக்கின்றார்கள். ஒரு லட்சத்து 46 ஆயிரம் சனத்தொகையில் இது சிறிய தொகையாக இருந்தாலும், எம்மிடம் பதிவு செய்யப்பட்ட தொகையாகவே அது காணப்படுகின்றது.

அரச வேலைவாய்ப்பு என்று சிந்திக்கின்ற மனநிலை மாற வேண்டும்: சிறிமோகன்(Photo) | More Than 10 Thousand Job Seekers In Kilinochchi

நாட்டமின்மை, விழிப்புணர்வின்மை காரணமாக இத்தொகை குறைவாக காணப்படலாம். ஆனால், என்னைப்பொறுத்தவரை, குறித்த தொகை 10 ஆயிரத்தை தாண்டியதாகவே இருக்கும். அவர்களில் 200 பேருக்கு மேற்பட்டவர்களிற்கு விழிப்புணர்வு அல்லது திருப்புமுனையாக அமையும் என்பதற்கு மாற்று கருத்து இல்லை.

இந்த நாடு பொருளாதார சுமையிலிருந்து மீள்வதற்கு எங்களை நாங்களே சுயமாக நிறுத்திக்கொள்ளவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

அரச வேலைவாய்ப்பு என்ற மனநிலை மாற வேண்டும்

அதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பையும், உள்ளூரிலேயே எம்மை நிறுத்திக்கொள்ளக்கூடிய நிலைப்பாட்டுக்கும் நாங்கள் மாற வேண்டும் என்ற இரு நிலைப்பாட்டில் உள்ளோம்.

அரச வேலைவாய்ப்பு என்று சிந்திக்கின்ற மனநிலை மாறி, ஏனைய திணைக்களங்களுடன் இணைந்து நாங்கள் செல்லவேண்டிய தேவை இருக்கின்றது.

இதைவிட எமது படிப்பிற்கும் வேலைவாய்ப்புக்கும் தொடர்பில்லாத நிலையும் இங்கு இருக்கின்றது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் எமது கற்கைநெறிகள் அமைந்திருக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பமாகவும் இது அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US