கிழக்கு மாகாணத்தில் 10,842இற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளார்கள் அடையாளம்
கோவிட் 3ஆவது அலையின் பின்னராக இது வரை கிழக்கு மாகாணத்தில் 10,842 இற்கும் மேற்பட்ட தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பில் 166 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 52 பேரும், அம்பாறை சுகாதார அதிகாரி பிரிவில் 3 பேரும், கல்முனையில் 17 பேரும் அடங்கலாக 238 கோவிட் நோய் தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுள்ளனர்.
கடந்த 7 நாட்களில் 1228 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஆகவே இந்த வாரம் நோயாளர்களது அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாக இருப்பதால் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்
கிழக்கில் இதுவரை 200 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 46 மரணங்களும்
இவ்வாரத்தில் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
