அரசுக்கு சொந்தமான மாளிகைகளில் இருந்த 1000க்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த பொருட்களை காணவில்லை
போராட்டகார்கள் முற்றுகையிட்டிருந்த ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை உள்ளிட்ட இடங்களில் இருந்து தொன்மை வாய்ந்த பொருட்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் காணாமல் போயுள்ளன.
இந்த பொருட்களை கண்டுபிடிப்பதற்காக சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில நபர்கள் இந்த இடங்களில் இருந்த தொன்மை வாய்ந்த பொருட்கள் மற்றும் சில பாகங்களை மறைத்து வெளியில் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பொருட்களை கொள்ளையிட திட்டமிட்டு நுழைந்த நபர்கள்
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை உள்ளிட்ட இடங்களுக்குள் போராட்டகாரர்கள் என்ற போர்வை திட்டமிட்ட சிலர் நுழைந்து, அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
போராட்டம் என்ற போர்வையில் அரசுக்கு சொந்தமான இடங்களை முற்றுகையிட்டு தங்கியிருந்த நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை ஆகியவற்றில் ஆங்கிலேய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு கிடைத்த பொருட்கள், வரலாற்று சிறப்புமிக்க ஓவியங்கள் உட்பட பல பெறுமதியான பொருட்கள் இருந்துள்ளன. இவை தொல்லியல் பெறுமதிக்க பொருட்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



