சஜித் கட்சியின் தேசியப்பட்டியலில் அதிகமான பேராசிரியர்கள் நியமனம்!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் அதிகமான பேராசிரியர்கள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
அவர்களின் பெயர்ப்பட்டியலை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இப்போதே தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் அடிப்படையில் 41 பேராசிரியர்கள் சஜித்தின் தேசியப்பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரம் குருநாகலில் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது அதில் கவனிக்கத்தக்க முக்கிய அம்சம் ஒன்று இருந்தது. அதுதான் 25 பேராசிரியர்கள் அந்த மேடையில் அமர்ந்திருந்தமை.
அப்படியென்றால் சஜித் எப்படிப்பட்ட ஆட்சி ஒன்றுக்குத் தயாராகின்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரம் தெரிவிக்கின்றது.
முழுமையான நல்ல கல்விமான்களை உள்ளடக்கிய அரசு ஒன்றை அமைப்பதற்கே அவர் தயாராகி
வருகின்றார் என்று அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
