உரித்து வேலைத்திட்டத்தில் அதிகளவானோரை உள்வாங்க நடவடிக்கை : வடக்கு ஆளுநர் தெரிவிப்பு
உரித்து வேலைத்திட்டத்தில் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணிப் பத்திரங்களின் உரிமையாளர்களையும் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P.S.M.Charls) தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கான 5400 காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
[RGGVXXCஸ
காணி உறுதிப்பத்திரங்கள்
மேலும் தெரிவிக்கையில், “காணி உறுதிப்பத்திரங்களை மீண்டும் பிரதேச செயலாளர்களிடம் வழங்கி தங்களுக்கான உறுதிகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை தொடர்பில் அறியக்கிடைத்துள்ளது.

காணி பத்திரம் கைமாற்றப்பட்டுள்ளமை, சீதனமாக வழங்கியுள்ளமை, வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ளமை போன்ற காரணங்களால் பலருக்கு உரித்து திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
எனினும் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணிப் பத்திரங்கள் தொடர்பில் கலந்துரையாடி ஜனாதிபதி தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பார்.

எனவே ஜனாதிபதியின் கனவு திட்டமான உரித்து வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” எனவும் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri