பருத்தித்துறை வைத்தியசாலையில் மேலும் பலர் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதி
பருத்தித்துறை வைத்தியசாலையில் மேலும் 14 பேர் பலர் எலிக்காய்ச்சல் வைரஸ் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதத்தில் எலிக்காய்ச்சல் வைரஸ் அறிகுறிகளுடன் 5 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை
டிசம்பர் மாதத்தில் நேற்று வரையில் 58 பேர் எலிக்காய்ச்சல் வைரஸ் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும், மூவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டு அங்கு அவசர சிகிச்சைப் பிரிவிலும் உயிரிழந்தனர்.

இதேவேளை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் வைரஸ் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டிருந்த நோயாளர்களில் சிலர், யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று இரவு 8 மணி வரையான நிலவரத்தின் அடிப்படையில் 39 பேர் எலிக்காய்ச்சல் வைரஸ் அறிகுறிகளுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam