இலங்கை மட்டுமன்றி உலகின் ஏனைய நாடுகளிலும் பணம் கூடுதலாக அச்சிடப்பட்டுள்ளது
இலங்கை மட்டுமன்றி அமெரிக்கா உள்ளிட்ட உலகின் ஏனைய நாடுகளிலும் கூடுதலாகப் பணம் அச்சிடப்பட்டுள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் இந்தளவு தொகை பணம் அச்சிடப்படவில்லை என்பதனை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் மத்திய வங்கிகளும் இவ்வாறு கூடுதல் தொகையில் பணம் அச்சிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் நிலவி வரும் அழுத்தங்களை மக்கள் மீது சுமத்தாதிருக்கும் நோக்கில் இவ்வாறு கூடுதல் அளவில் பணம் அச்சிடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
நோயாளி ஒருவரைக் காப்பாற்றுவதற்காகச் சத்திர சிகிச்சை செய்வது போன்றே இந்த பணம் அச்சிடல் நடவடிக்கையையும் கருத வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பணம் அச்சிடுவதில் சில ஆபத்துக்கள் இருப்பதனை மறுப்பதற்கில்லை என்ற போதிலும் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை வரையறுக்கவே இவ்வாறு பணம் அச்சிடப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam