இலங்கையில் நாள் ஒன்றில் அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!
இலங்கையில் நாள் ஒன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கோவிட் - 19 வைரஸ் தொற்றாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர்.
அதற்கமைய இன்று 1,466 பேருக்குக் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று காலையிலிருந்து மாலை வரை 988 தொற்றாளர்களும், மாலையிலிருந்து இரவு வரை 478 தொற்றாளர்களும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் நாட்டின் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 953 ஆக எகிறியுள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்து 83 ஆக உயர்வடைந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் பட்டியலில் இன்றும் 6 பேர் பதிவாகியுள்ள நிலையில் நாட்டில் கோவிட் தொற்றினால் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 661 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுக்குள்ளான 9 ஆயிரத்து 209 நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 1451 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam