தொழிற்சாலைகளில் அதிக தொற்றாளர்கள் பதிவாகின்றனர்
தொழிற்சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் தொற்றாளர்கள் பதிவாகின்றனர் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலைகளின் பிரதானிகளுக்கு இது குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உரிய சுகாதார விதிமுறைகள் குறித்து தொழிற்சாலைகளின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கூடுதலான எண்ணிக்கையில் நோய்த் தொற்றாளர்கள் பதிவாகினால் அந்த தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நோய்த் தொற்று உறுதியானவர்களை தனிமைப்படுத்தி நோய்த் தொற்றினால் பாதிக்கப்படாதவர்களை கொண்டு தொழிற்சாலைகளை நடாத்திச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri
