தங்க கடத்தலை முறையடித்த இலங்கை கடற்படை: சுற்றிவளைப்பில் 5 பேர் கைது
நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக கடத்தமுயன்ற 2 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள சட்டவிரோத தங்கத்துடன் ஐவர் மன்னாரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் விசேட நடவடிக்கையின் போது மன்னார் - ஒலைத்தொடுவையில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையின் மூலம் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட படகு, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணை நடவடிக்கை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 முதல் 56 வயதுக்குட்பட்ட வங்காலை மற்றும் மன்னார் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறையில் உள்ள சுங்கத் தடுப்பு சந்தேகநபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.










ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 16 மணி நேரம் முன்

இரண்டு நாட்களில் விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri
