திருகோணமலை மாவட்டத்தில் கடும் மழையினால் ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கி வருகின்றன.
இம்மாவட்டத்தின் கந்தளாய், முள்ளிப்பொத்தானை, தம்பலாகாமம், புல்மோட்டை, மூதூர் மற்றும் தோப்பூர் போன்ற பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகின்றது.
கந்தளாய் பகுதியில் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதோடு, வீதிகளிலும் வெள்ளநீர் வழிந்தோடுவதோடு வடிகாண்களிலும் நீர் நிரம்பிக் காணப்படுகின்றது.
கந்தளாயில் தாழ் நிலப்பகுதிகளில் வசித்து வரும் ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
தொடர் மழையால் கந்தளாயில் பேராறு மதுரசாநகர் சிவன்கோவில் வீதி, கெமுனு மாவத்தை போன்ற பல இடங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
மேலும் இப்பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.










தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக ராணுவத்தைக் களமிறக்கும் பிரித்தானிய அரசு News Lankasri
