மஹிந்தானந்தவிற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக மேலும் ஒரு வழக்குத் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரம் போர்ட் சம்பவம் தொடர்பிலேயே இந்த வழக்கும் தொடரப்பட உள்ளதாக சட்டத்துறைசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரம் போர்ட் சம்பவம் தொடர்பில், ஊழல் மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னதாக வழக்குத் தொடரப்பட்டு அதற்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த கரம் போர்ட் விநியோகம் குறித்த கொடுக்கல் வாங்கல்களில் சூழ்ச்சி செய்ததாக மஹிந்தானந்த மீது குற்றவியல் வழக்குத் தொடரப்பட உள்ளது.
குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் இந்த வழக்கு தொடரப்பட உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அப்போதைய செயலாளர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட உள்ளனர்.
கரம் போர்ட் விவகாரத்தில், மஹிந்தனாந்த அலுத்கமகேவிற்கு ஏற்கனவே 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan