தொடரும் சீரற்ற காலநிலையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு
மட்டக்களப்பு - புல்லுமலை தம்பட்டி, மற்றும் மாவடிஓடை வண்ணாத்தி ஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டுள்ளதாக மாவட்ட விவாசய அமைப்பின் தலைவர் ரமேஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள வயல்களில் வேளாண்மை மற்றும், காவலுக்கு சென்ற விவசாயிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தொடர் கடும் மழை காரணமாக அந்தபகுதியிலுள்ள குளங்களின் வான்கதவு திறக்கப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் வெள்ளத்தில் முழ்கியதுடன் வீதிகள் பல மூழ்கியதையடுத்து அந்த விவசாயிகள் தமது வாடிகளில் இருந்து வீடுகளுக்கு வெளியேறமுடியாமல் சிக்குண்டுள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வடகீழ் பருவப் தொடரும் நிலையில், , கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரம்படித்தீவு, சந்திவெளி, திகிலிவெட்டை, புலிபாய்ந்தகல், மற்றும் சாராவெளி போன்ற கிராம மக்கள் ஏதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதேச செயலாளர், மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை நேரில் சென்று ஆராய்ந்து கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இதன்போது அப்பபுகுதி மக்களின் வெள்ளத்தினால் தரைவழிப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதானால் படகுப்பாதை மூனமான போக்குவரத்து, மற்றும் அப்பகுதி மக்கள் இடம்பெயரும் போது அதற்குரிய முன்னாயுத்த ஏற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடி முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி சந்தி
திருநெல்வேலி சந்தியிலிருந்து கோண்டாவில் செல்லும் பாதையில் வீதியோரத்தில் நின்ற மலை வேம்பு மரம் ஒன்று நேற்றையதினம் வேரோடு சரிந்துள்ளது.
இதனால் குறித்த பாதையுடாக பயணத்தை செய்யும் மக்கள் மிகவும் அசௌகரிகங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படகிறது.
உணவு வழங்கி வைப்பு
தற்போது பெய்துவரும் பலத்த அடைமழையால் பாதிப்புற்ற மக்களுக்கு றொட்டறிக் கழகத்தினால் நேற்றைய தினம் (26.11.2024) சமைத்த உணவுகள் வெல்லாவெளிப் பிரதேசத்தில் வழங்கி வைக்கப்பட்டடுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்படும் வெல்லாவெளிப் பிரதேசத்தின் வேத்துச்சேனைக் கிராம மக்களுக்கே போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் ஒத்துழைப்புடன் இந்த சமைத்து உணவுகள் வழங்கி வைக்கப்பட்டடுள்ளன.
அம்பாறை
அம்பாறை மாவட்டத்தின் ஓலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்துவிழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று-கல்முனை பிரதான போக்குவரத்துத்துப்பாதையின் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பெரும் பாதிப்புகள் எதிர்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியில் ஒலுவலில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் இன்று அதிகாலை இடிந்துவீழ்ந்துள்ளதன் காரணமாக அதன் ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே வெள்ள நீர் பாலத்தினை மேவிய நிலையில் இருப்பதனால் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது.
முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் தொடர்ச்சியான மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிபாலம் வெளியே தெரியாதபடி இருந்த காரணத்தினால் வட்டுவாகல், சாலை முகத்துவாரங்கள் வெட்டிவிடப்பட்ட நிலையில் நீர் வடிந்திருந்தது.
நுவரெலியா
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (26) பிற்பகல் வரை 193 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக 98 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 50 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர் 3 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |