நீதிமன்ற நடவடிக்கைகளில் மாற்றம்: திருகோணமலை மக்களுக்கு அறிவுறுத்தல்
திருகோணமலை - மொரவெவ சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் 2024 ஜனவரி 1 முதல் மொறவெவ ரன்பண்டா ஞாபகார்த்த பல்நோக்கு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்குகள் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமைகளில் மொறவெவ ரன்பண்டா ஞாபகார்த்த பல்நோக்கு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மொரவெவ - கோமரங்கடவல பொலிஸ் அதிகார எல்லைக்குட்பட்ட வழக்குகளை கையாள்வதற்காக மொறவெவ சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளே இவ்வாறு நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கை
மொறவெவ பொலிஸ் நிலையத்தை கடந்து மொறவெவ பொலிஸ் நிலையத்தை நோக்கி செல்லும் வீதியில் இராணுவ முகாமிற்கு அருகில் இராணுவ முகாமிற்கு முன்பாக ரன்பண்டா ஞாபகார்த்த பல்நோக்கு மண்டபம் காணப்படுகிறது.
மொறவெவ மக்கள் கடந்த காலங்களில் செவ்வாய்க்கிழமைகளில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சென்றனர்.
தற்போது நீதிமன்ற திகதிக்கு முந்தைய திங்கட்கிழமை மொரவெவ சுற்றுலா நீதவான் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்.
பொலிஸ் நிலைய தகவல்
அதாவது ஜனவரி 02 ஆம் திகதி நீதிமன்றத் திகதியாகவுள்ள மொறவெவ பிரதேச மக்கள் அனைவரும் ஜனவரி 1 ஆம் திகதி மொரவெவ ரன்பண்டா ஞாபகார்த்த பல்நோக்கு மண்டபத்திற்கு வந்து தமது நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் நீதிமன்ற திகதிகளைக் கொண்ட அனைத்து மக்களும் முந்திய திங்கட்கிழமை மொரவெவ சுற்றுலா நீதிமன்றத்திற்கு வந்து தமது நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும்.
இந்நிலையில் 2024ஆம் ஆண்டு முதல் மொறவெவ - கோமரங்கடவல பொலிஸ் நிலையம் மற்றும் மொறவெவயில் அமைந்துள்ள அரச நிறுவனங்கள் தொடர்பான எந்தவொரு வழக்குகளும் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.
மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி - 0718591198