அரச நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டு புத்தாண்டின் தொடக்கமான நாளை (01.01.2024) அனைத்து அரச ஊழியர்களின் பங்கேற்புடன் உத்தியோகபூர்வ விழாவை தமது பணியிடங்களில் நடத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட சபைகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பிரகாரம் உத்தியோகபூர்வ வைபவம் நாளை முற்பகல் 09.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
அரச ஊழியர்களின் அர்ப்பணிப்பு
பொதுமக்களுக்கு வினைத்திறனுள்ள அரச சேவையை வழங்குவதற்கு முழு அரச ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதனால் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் உள்ளூராட்சி மட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரச நிறுவனங்களிலும் இந்நிகழ்வு நடத்தப்பட வேண்டுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது அரச ஊழியர்கள் அனைவரும் அரச சேவை உறுதிமொழியை வழங்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |