மொரடோரியம் கடன் நிவாரணங்களை எதிர்பார்க்கும் பல்வேறு வணிகங்கள்
கடன் நிவாரணங்களை எதிர்பார்க்கும் பல்வேறு வணிகங்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வணிகங்கள் இன்னும் மொரடோரியம் என்ற கடன் நிவாரணங்களை எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில், வங்கித் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நடைமுறையை தொடர்ச்சியை ஊக்குவிப்பதில்லை என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
மொரடோரியம் கடன் நிவாரணங்கள்
வணிகங்கள் மீட்சியை நோக்கி நகர்வதற்கான வேறு வழிகளை ஆராய வேண்டும் என்றும், வங்கிகளில் தொடர்ந்து சார்ந்திருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் 'இலங்கை பொருளாதாரக் கண்ணோட்டம் 2023' வெளியீட்டு நிகழ்வின்போது, நாட்டின் தனியார் துறை வர்த்தகத் தலைவர்களிடம் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடனை செலுத்துவதில் நிவாரணம் கேட்கும் முக்கிய துறைகளில் சுற்றுலாவும் ஒன்றாகும். இந்தநிலையில், சுற்றுலா துறையை மீட்டெடுப்பது சுற்றுலாவை மேம்படுத்துவதில் இருந்து வர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையை பேணுவது முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.
இந்தநிலையில் வணிகங்கள் தொடர்பில், மொரடோரியம் என்ற இடைக்காலத் தடையைத்
தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, முடிந்தவரை கடனை மறுசீரமைக்குமாறு மத்திய வங்கி
வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
