தேசிய கல்வியியற்கல்லூரி மாணவர்களின் மாதாந்த கொடுப்பனவில் இழுபறி
தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களின் மாதாந்த கொடுப்பனவை எட்டாயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு கடந்த பெப்ரவரி மாதம் அமைச்சரவை எடுத்த தீர்மானம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களுக்கு மாதாந்தம் ஒதுக்கப்படும் 4800 ரூபாயைத் தவிர, கூடுதல் பணம் எதையும் செலவழிக்க வேண்டாம் என்றும் அமைச்சகம் கல்லூரிகளுக்குத் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், ஒரு மாணவருக்கு நாளொன்றுக்கு ஒதுக்கப்படும் 160 ரூபா தொகை போதுமானதாக இல்லை என அமைச்சுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
இதன்படி, கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் இருந்தும் மாணவர்களுக்கு கொடுப்பனவு கிடைக்காதது பாரிய பிரச்சினை எனவும், இதன் காரணமாக கல்லூரி வளாகத்தில் கிடைக்கும் பொருட்களை மாணவர்களின் உணவில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விரிவுரையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த பெப்ரவரி மாதம் கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மார்ச் மாதம் முதல் மாணவர்களின் கொடுப்பனவு 8000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
