பேசுபொருளான டோக் குரங்குகள்: களத்தில் இறங்கும் விவசாயிகள்
அநுராதபுர மாவட்ட விவசாயக் குழு, டோக் குரங்குகளின் எண்ணிக்கையை கண்டறிய, ஒரு கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளதோடு அரச அதிகாரிகள் சிவில் சமூகத்துடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சமூக ஊடகங்கள் மூலம் இந்த திட்டத்தை முன்கூட்டியே விளம்பரப்படுத்தவும் குழு ஒப்புக்கொண்டது.
கணக்கெடுப்பு
இந்தநிலையில், கிராம அலுவலர்கள் மற்றும் பிற அரச அதிகாரிகளால், சிவில் சமூகத்தின் உதவியுடன் குறுகிய காலத்திற்குள், இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இதனையடுத்து, மாவட்டத்தில் டோக் குரங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் முதன்மை வாழ்விடங்கள் குறித்த சேகரிக்கப்பட்ட தரவு விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)