சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலை பிரகடனம்
சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது.
குரங்கம்மை வைரஸ் பரவலையடுத்து இவ்வாறு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு
உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
பிரித்தானியா 800இற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், பிரித்தானியாவில் தொற்று பரவும் வேகம் 5 நாட்களில் 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார தரப்பினர் கூறியுள்ளனர்.

இதேவேளை ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் போர்த்துக்கல்லிலும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், சிங்கப்பூரிலும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார ஸ்தாபனம்
இந்நிலையில் ஒன்றுகூடிய உலக சுகாதார ஸ்தாபனம் அசாதாரணமான வகையில் தொற்று பரவுவது கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ளது.

அத்துடன் இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus கூறுகையில், இந்த தொற்றுநோய் குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் பரவக்கூடியதல்ல என்பது தெளிவாகின்றது.
இந்த தொற்று நோய் எல்லை பகுதிகளில் மேலும் பரவும் அபாயமுள்ளது.
தற்போதைய சூழலில் சமூக பரவலாக தொற்றின் வேகம் விரிவடைவதால், குழந்தைகளுக்கு கூட தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri