கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இரண்டு நாட்களில் 20 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இரண்டு நாட்களில் 20 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விடயத்தை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதுடன், இதனையடுத்து மாகாணம் முழுவதும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 71ஆக அதிகரித்துள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த புதன்கிழமை 52 என உறுதி செய்யப்பட்ட பாதிப்பு எண்ணிக்கை தற்போது மிக வேகமாக 71 என அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒன்ராறியோவில் ஐந்து பேர்களுக்கும் ஆல்பர்ட்டாவில் ஒருவருக்கும் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகளில் குரங்கம்மை தொற்று
இதனிடையே உலக நாடுகளில் இதுவரை 700 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
