கந்தளாய் பிரதேசத்தில் குரங்குகள் தொல்லை: பொது மக்கள் விடுத்துள்ள கோரிக்கை (Photos)
திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பகுதியில் குரங்குகளின் தொல்லையால் பாதிக்ப்பட்டுள்ள பொது மக்கள் அதனை கட்டுப்படுத்தி தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு, பேராற்று வெளி அணைக்கட், மூன்றாம் கொலனி, மத்ரஸா நகர், ரஜ எல,மற்றும் வாத்தியகம போன்ற பிரதேசங்களில் குரங்குகளின் தொல்லை காரணமாக அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
நூற்றுகும் மேற்பட்ட குரங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பகுதி வீடுகளில் இருக்கும் பொருட்களை கூட தூக்கிச் செல்வதாகவும் வேளாண்மை பயிர்களை சேதப்படுத்துவதாவும் தெரிவிக்கின்றனர்.
சமைத்த உணவுகளை கூட விட்டுவைப்பதில்லை
அத்துடன், ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் வீட்டினுள்ளே புகுந்து சமைத்த உணவுகளை கூட விட்டுவைப்பதில்லை எனவும் காலை முதல் மாலை வரை குரங்குகளால் சிரமத்திற்குள்ளாகுவதாகவும் பொது மக்கள் முறையிடுகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து குரங்குகளில் தொல்லையை கட்டுப்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.










பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
