நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பாதணியோடு பிக்கு! முகம்சுழிக்க வைக்கும் செயல்
வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள், பாதணிகளை அணிந்து சில பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்களும், பௌத்த பிக்கு ஒருவரும் சென்றுள்ள காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
அதியுயர் பாரம்பரியங்களுடன், மிக ஒழுக்கமாக பேணப்பட்டு வரும் ஆலய சூழல் மற்றும் ஆலயம்சார் செயற்பாடுகளுக்கு மத்தியில், இப்படி பாதணி அணிந்து ஆலயத்திற்குள் பிக்கு ஒருவர் உள்ளிட்ட சிலர் வருகைத் தந்தமை பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில், தமிழர் கலாசாரத்தில் மிகப்பெரியதாக போற்றப்படுவது, ஒழுக்கமும், பாரம்பரியம் பேணுதலும், மரியாதை செய்தலும் ஆகும்.
பாதணியோடு சென்ற பிக்கு
ஏனைய பல விடயங்களில் பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்தாலும் கூட இதுபோன்ற கலாசாரத்திற்கு தீமை விளைவிக்கும் பணிகளைச் செய்வதில் யாரும் உடன்படுவதில்லை.
அதிலும், தெய்வ வழிபாட்டில் உள்ளதை உள்ளபடி காத்தலும், பேணலும் தலைமுறை தலைமுறையாய் சீர்குழையாமல் வழிவந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறான சூழலில், தமிழர்களால் அதிகம் போற்றப்படும் ஆலயத்திற்குள் இவ்வாறு பாதணி அணிந்து வருவதென்பது பலருக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், விமர்சனங்களையும், பிரிவினைவாதத்தையும் ஏற்படுத்துவதாக அமைகின்றது.
இழிவான செயல்
நாகபூசணி அம்மன் ஆலயம் ஒரு பக்தித் தளம் மாத்திரம் அல்லாமல் பலரும் வியந்து பார்க்கும் வரலாறு கொண்ட, உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் வந்து தரிசித்துச் செல்லும் புகழ்பெற்ற தளமாகவும் காணப்படுகின்றது.
இந்தநிலையில், பாதணிகள் அணிந்து வருதல் போன்ற சில செயற்பாடுகள் குறித்த புனித தளத்திற்கு உகந்ததல்ல என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
