இறுதியாண்டில் காவிகளை துறக்கும் பல்கலைக்கழகங்களில் கற்கும் பிக்கு மாணவர்கள்-அமைச்சர் விதுர தகவல்
பௌத்த பல்கலைக்கழகங்களில் கற்கும் பிக்கு மாணவர்களில் 45 வீதமானோர் இறுதியாண்டில் காவிகளை துறந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதாக தெரியவந்துள்ளது.
புத்தசாசனம், சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அமைச்சுக்களுக்கான ஆலோசனை தெரிவுக்குழுக் கூட்டத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நிலைமை கட்டுப்படுத்த நடவடிக்கை
இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக க உயர் கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பட்டம் பெற்ற பின்னர் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பும் பிக்குமார்
இலங்கையில் சிறுவயதில் துறவரம் பூணும் பௌத்த பிக்குகளில் ஒரு சிலர் வயது வந்த பின்னர், காவியை துறந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்பும் நிலைமை காணப்படுவதாக கூறப்படுகிறது.
பௌத்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி கற்று வரும் பெரும்பாலான பிக்குகள் பட்டங்களை பெற்ற பின்னர், துறவரத்தில் இருந்து விலகி சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
