பங்களாதேஷை சேர்ந்த பிக்கு கடத்தப்பட்டார்: திரைப்பட பாணியை மிஞ்சும் சம்பவம்
பிலியந்தலை - மடபான பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் தங்கியிருந்த பங்களாதேஷை சேர்ந்த பிக்கு ஒருவரை மஹரகமவில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிக்கு முறைப்பாடொன்றுக்கு சாட்சியமளிக்க நேற்று (12) பிற்பகல் மஹரகமவிற்கு சென்றிருந்த போது சிற்றுார்ந்தில் வந்த குழுவினால் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த அடையாளம் தெரியாத நபர்கள் பிக்குவின் முகத்தை மூடிக் கடத்திச் சென்ற நிலையில், பின்னர் பிக்குவை ஹாலி - எல பிரதேசத்தில் கைவிட்டுச் சென்றுள்ளனர்.
அங்கிருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, குறித்த பிக்கு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 2 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
