பௌத்த பிக்கு ஒருவர் கைது
பெண் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தியதலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்தே குறித்த பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் குறித்த பௌத்த பிக்குவை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்த பௌத்த பிக்கு பொரளந்த பகுதியில் அமைந்துள்ள விஹாரையொன்றைச் சேர்ந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
46 வயதான பௌத்த பிக்கு, 40 வயதான பெண் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் திருமணமானவர் எனவும், அவருடன் பௌத்த பிக்கு ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
