சர்வதேச நாணய நிதியம் ஒதுக்கியுள்ள அமெரிக்க டொலரை பெற தகுதியடைந்துள்ள இலங்கை
நாடொன்றில் வெளிநாட்டு இருப்பை வலுப்படுத்த நிபந்தனையற்ற விசேட மீள்பெறுதல் உரிமைகளுக்காக 650 பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த பணத்தை சர்வதேச நாணய நிதியம் ஒதுக்கியுள்ளது.
இதனூடாக 816 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்ள இலங்கை தகுதி பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை நாட்டில் கோவிட் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் இலங்கையின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால் அரசாங்கத்திற்கு தினமும் சுமார் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகிறது.
எனவே நாடு முடக்கப்படுவதை தொடர்ந்தும் நீடிக்காது, முடிந்தவரை குறுகிய காலத்தில் திறக்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan