விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி! சபையில் சர்ச்சைக்குள்ளான தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் மாத்தயா மற்றும் யோகியை முரண்பட வைத்து அமைப்பை பிளவுபட செய்யவே தனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பில் அதன் தலைவர் பிரபாகரனோடு மாத்தயாவும், யோகியும் முரண்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் சில உதவிகளை வழங்கி அவர்களை மேலும் பிளவடைய வைக்கப்பட்டது.
2005ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவும், விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்துத்தான் தேர்தலில் வெற்றி பெற்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
