கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகையான பவுண்ட் மற்றும் டொலர்கள்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த 7 விமான பயணிகளிடம் இருந்து பெருந்தொகையான அமெரிக்க டொலர் மற்றும் பவுண்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாணயத்தின்படி 65 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான அமெரிக்க டொலர், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகிய வெளிநாட்டு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்க பிரிவின் போதை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சுங்க பிரிவிற்கு வெளிப்படுத்தாத அந்த பணத்தை நாட்டில் இருந்த வெளியே கொண்டு செல்வதற்கு சந்தேக நபர்கள் முயற்சித்துள்ளனர்.
இன்று காலை ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானம் ஊடாக சந்தேக நபர்கள் பயணங்களை மேற்கொள்ள தயாரான போது சுங்க பிரிவு அதிகாரிகள் இந்த வெளிநாட்டு நாணயத்தை கண்டுபிடித்துள்ளனர்.
அவர்க்ள தங்கள் பயணப்பையினுள் மிகவும் நுட்பமான முறையில் அந்த பணத்தை மறைத்து வைத்திருந்ததாக சுற்றிவளைப்பின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்



