இலங்கை வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
இலங்கை சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் பையில் பெறுமதியான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு இலட்சம் இலங்கை ரூபாய், 100 அமெரிக்க டொலர்கள் மற்றும் 200 அவுஸ்திரேலிய டொலர்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
காலி சமனல மைதானத்திற்கு அருகில் வைத்து நால்வர் பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் தனது பையை தரையில் வைத்துவிட்டு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொள்ளைக் கும்பல் அவ்விடத்திற்கு வந்ததுடன் அவர்களில் ஒருவர் பையை எடுத்துக்கொண்டு ரத்கம கடற்கரையை நோக்கி ஓடியுள்ளார்.
பயணிக்கு ஏற்பட்ட விபரிதம்
குறித்த சுற்றுலா பயணியான பெண்ணும், கொள்ளையர்கள் பின்னால் ஓடிய போது கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிலிப்பைன்ஸ் பெண், ரத்கம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், காலி நகரம் மற்றும் கோட்டைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பை தொலைந்து போனதாகவும், அதில் இருந்த பணத்தை திருடர்கள் எடுத்துள்ளனர். எனினும் கடவுச்சீட்டு மட்டும் கிடைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 18 மணி நேரம் முன்

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
