யாழில் சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடி! மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Kajinthan Mar 16, 2023 12:17 PM GMT
Report

சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியோர்களையும், அரசினால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெறும் முதியவர்களையும் இலக்கு வைத்து ஒரு குழு பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றது.

மோசடியாளரின் யுக்தி

புதிதாக வந்த சமுர்த்தி உத்தியோகத்தர் என தம்மை அறிமுகப்படுத்தி 20,000 ரூபாய் எம்மிடம் தந்தால் மாதாந்தம் ஒரு தொகை கொடுப்பனவு வழங்குவோம் என கூறி முதியவர்களிடம் பணம் பறித்து செல்லும் சம்பவங்கள் உடுவில் கோப்பாய் வேலணை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மை நாட்களில் இடம் பெற்றிருந்தது.

யாழில் சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடி! மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் | Money Scam People Be Cautious

இந்நிலையில் நேற்றைய தினம் ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் வயோதிப பெண் ஒருவரிடம் 19ஆயிரம் ரூபா பெற்றுச்சென்றுள்ளதாக அந்த பெண் கிராம சேவகரிடம் முறைப்பாடு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேற்படி சம்பவம் இடம் பெற்றிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சரவணை பகுதியில் (NP- HX-3125) இலக்க மோட்டார் சைக்கிளில் நடமாடுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளில் சென்று நல்லூர் பகுதியில் ஏற்கனவே ஒருவர் மோசடி செய்திருந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் ஏழாலை பகுதியைச் சேர்ந்தவருடையது என அடையாளம் காணப்பட்டது.

கைதுசெய்வதற்கான நடவடிக்கை ஆரம்பம்

விசாரணைகளின் போது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை தான் விற்பனை செய்ததற்கான ஆவணத்தை காண்பித்ததாக ஊர்காவற்துறை பிரதேச செயலகர் திருமதி மஞ்சுளாதேவி தெரிவித்தார்.

யாழில் சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடி! மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் | Money Scam People Be Cautious

எனவே குறித்த நபர் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

எனவே பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஊர்காவற் துறை பிரதேச செயலக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.  

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US