கிளிநொச்சி விவசாயிகளிடம் முறையற்ற விதத்தில் பெறப்பட்ட பணம்
கிளிநொச்சி விவசாயிகளிடமிருந்து 39 இலட்சத்து 47 ஆயிரத்து 529 ரூபாவிற்கு மேற்பட்ட நிதி முறையற்ற விதத்தில் மாவட்ட உயர்நிலை அதிகாரிகளின் துணையுடன் செலவிடப்பட்டிருக்கின்றமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019 வரையான ஐந்து ஆண்டுகளில் குறித்த அளவிலான பணம் நிதிளாக அறவிடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இது தொடர்பி்ல் மேலும் தெரிய வருவதாவது,
கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பெரும் நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் கீழுள்ள ஏழாயிரத்து ஐநூறு வரையான விவசாயிகளிடமிருந்து நீரப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் உள்ளிட்ட மாவட்ட உயர்நிலை அதிகாரிகளின் அங்கீகாரத்துடன் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அறவிடப்பட்ட நிதி அறவிடப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
மேலும் இந்நிதிப்பணமானது, எந்தவித அனுமதிகளும் இன்றி தான்தோன்றித்தனமாக செலவிடப்பட்டிருக்கின்றன.
இதனை, விட 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிகளில் அறவிடப்பட்ட மேலும் பல இலட்சம் ரூபாய் நிதியும் இவ்வாறு வங்கிகளில் வைப்பிலிடப்படாமல் செலவிடப்பட்டிருக்கின்றன.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரிய போது குறித்த நிதி சேகரிப்பு அல்லது செலவு செய்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என குறித்த திணைக்களம் கைவிரித்துள்ளது.
மாவட்டத்தின் வறுமை சிறார்களின் போசாக்கின்மை என பல்வேறு விதங்களில் நெருக்கடிகளை எதிர்நோக்கும் போதும் அவற்றுக்கான எந்த நிதியும் செலவிடப்படாது ஆடம்பர நிகழ்வுகளுக்கு பெருந்தொகை நிதி மாவட்டத்தின் உயர்நிலை அதிகாரிகள் துணையுடன் செலவிடப்பட்டிருக்கின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |