புலம்பெயர் தமிழர்களின் பணம் - நகைகளை இலக்கு வைத்து அரசின் இரகசிய நகர்வுகள்!
வடக்குகிழக்கில் அதிகரிக்கும் நிலத்தகராறுகள் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் ஸ்திரதன்மை இழக்கச்செய்யும் பாதிப்புகள் குறித்து தற்போது கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
2024 மார்ச் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்த ஐக்கிய நாடுகள்மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்,பிற்போக்குதனமான சட்டங்கள்,ஏதேச்சதிகார அணுகுமுறைகள் போன்றவற்றால் இலங்கையில் பேண்தகு அமைதி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கம் வடக்குகிழக்கை இராணுவமயமாக்கலில் இருந்து விடுவிக்கும்,தமிழ் முஸ்லீம் சமூகங்களின் அடிப்படை நில உரிமையை மதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாவிட்டால் அமைதியும் நல்லிணக்கமும் சாத்தியமாகாது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்நிலையில், வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலய வீதி விடுவிப்பு மற்றும் காணி விடுவிப்பினை அரசு ஒருபுறம் முன்னெடுத்தவாறே மறுபுறம் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் பல விசனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த சர்ச்சைகள் தொடர்பில் லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா காணி அபகரிப்பின் பின்னணி தொடர்பில் சில விளக்கங்களை வழங்கியுள்ளார்.
மேலும், குறித்த காணி அபகரிப்பை தற்போதைய அரசாங்கம் எவ்வாறு கையாண்டுள்ளது என்பதையும் பின்வரும் காணொளியில் சுட்டிக்காட்டியுள்ளார்...