கனடாவுக்கு அனுப்புவதாக பணமோசடி செய்தவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பணமோசடி செய்த தம்பதிக்கு ஜுலை 04ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பெருந்தொகை பணம் மோசடி
உலக வர்த்தக மையத்தில் அலுவலகம் ஒன்றை நடத்தி கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பெரும் தொகைப் பணத்தை மோசடி செய்த தம்பதியொன்றை கடந்த மாதம் பொலிசார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் தொடர்பாக தற்போதைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுவருவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து அவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்த கருத்தை கவனத்திற் கொண்ட கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், எதிர்வரும் ஜூலை மாதம் 04ம் திகதி வரை அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |