சர்வதேச நாணய நிதியத்தின் வலியுறுத்தல் : நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்
சர்வதேச நாணய நிதிய (IMF) வலியுறுத்தலின் அடிப்படையில் நாட்டில் கறுப்புப் பணத்திற்கு எதிராக குறைந்தபட்சம் 10 பணமோசடி குற்றச்சாட்டுகள் மேல் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாகப் பெறப்பட்ட நிதிகளின் உண்மையான தோற்றத்தை மறைத்து, அவற்றை முறையானதாகத் தோன்றும் வகையில் காட்டும் செயல்பாட்டையே பணமோசடி என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், இவற்றில் பெரும்பாலானவை போதைப்பொருள் கடத்தலுடன் கையாளப்படுகின்றன என்று தெரியவந்துள்ளது.
பண மோசடி விசாரணை
கடந்த ஆண்டில் மாத்திரம் இந்த மோசடிகளுக்காக குறைந்தது ஆறு முதல் ஏழு தண்டனைகள் விதிக்கப்பட்டன.
இருப்பினும், இந்த நிதி மோசடிக் குற்றங்கள் குறித்து மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் இல்லை என்று அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வரையறுக்கப்பட்ட வளங்கள், திறன் இடைவெளிகள் மற்றும் ஒழுங்குமுறை முகவர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாமை நாட்டின் பணமோசடி எதிர்ப்பு முயற்சிகளைத் தடுக்கின்றன.
இதன் காரணமாக இலங்கையின் பணமோசடி விசாரணை வரலாற்றில் இதுவரை 20 வரையான குற்றப்பத்திரிகைகளே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலைமைக்கு சாட்சியங்களின் பற்றாக்குறையே முக்கிய காரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |