கூட்டுறவு வங்கியில் பாரிய பண மோசடி...! கல்கிசை பொலிஸில் முறைப்பாடு
கொழும்பு புறநகர் பகுதியான தெஹிவளை-கல்கிசை கூட்டுறவு வங்கியில் 25 கோடி ரூபா அளவிலான மோசடியொன்று நடைபெற்றுள்ளதாக முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு இன்றைய தினம் (15.06.2023) கல்கிசை பொலிஸ் நிலைய மோசடிப் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
இரத்மலானை, கல்கிசை, கரகம்பிடிய, அத்திடிய, பெலெக்கடை ஆகிய பிரதேசங்களில் இருக்கும் தெஹிவளை-கல்கிசை கூட்டுறவு வங்கி கிளைகளின் வைப்பாளர்களே இந்த முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
பணம் மோசடி செய்யப்பட்டிருக்கலாம்

குறித்த வங்கிக் கிளைகளில் சுமார் 25 கோடிக்கும் அதிகமான வைப்புத் தொகையைத் தாம் மேற்கொண்டுள்ள போதும், மேல் மாகாண கூட்டுறவு ஆணையாளராக இருக்கும் பெண்ணொருவர் தங்கள் வைப்புகளை மீளப் பெறவிடாது தடைசெய்துள்ளதாக அவர்களின் முறைப்பாட்டில் சுட்டிகாட்டியுள்ளனர்.
அதன் காரணமாக தங்கள் வைப்புப் பணம் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பணவைப்பாளர்கள் கல்கிசை பொலிஸ் நிலைய மோசடிப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan