கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடி!
பண்டத்தரிப்பு - வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 42 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை பெற்றுவிட்டு ஏமாற்றுவதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணத்தினை பெற்றுவிட்டு பல மாதங்களாகியும் குறித்த பெண், முறைப்பாடு பதிவு செய்தவரை கனடாவிற்கு அனுப்பாமலும், பெற்றுக்கொண்ட பணத்தினையும் மீள வழங்காமலும் இருந்த காரணத்தினால் இவ்வாறு முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது முறைப்பாடு

குறித்த பெண் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தங்களிடம் 55 இலட்சம் மற்றும் 44 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவினை பெற்றுவிட்டு ஏமாற்றுவதாக, கடந்தவாரம் இருவர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் மேலும் ஒருவர் இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri