அசாத் மௌலானாவின் வங்கிக் கணக்கிற்கு வந்த 700 இலட்சம் ரூபா: சபையில் போட்டுடைக்கப்பட்ட தகவல்
தென்னிலங்கையில் சிங்கள ஜனாதிபதி ஒருவரை வெற்றி பெற வைக்க 9 முஸ்லிம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறுவார்களா என முன்னாள் அமைச்சரும், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அளுத்கமகே கேள்வியெழுப்பியுள்ளார்.
2017ஆம் ஆண்டு முதலாவதாக பணியில் இருந்த போது 6000 ரூபா மாத சம்பளத்தை பெற்ற அன்ஷிப் அசாத் மௌலானா என்பவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து 700 இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டமை ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சனல் 4 காணொளி தொடர்பில் நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அன்ஷிப் அசாத் மௌலானாவிற்கு எதிராக பொலிஸில் நிதி மோசடி உள்ளிட்ட பல முறைப்பாடுகள் உள்ளதாகவும் அவர் சுட்டிககாட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |