காதலுக்கு எதிர்ப்புக் காட்டிய தந்தை! மூத்த மகனின் கொடூரச் செயல்
குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை, பிபிலை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் 25 வயதுடைய அவரின் மூத்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மேற்படி இளைஞர், யுவதி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
இந்தக் காதலுக்குத் தந்தை கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார்.

இந்தக் காதல் விவகாரம் தொடர்பில் நேற்று இரவு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது வீட்டில் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் தந்தையை மகன் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். மகனைக் கைது செய்துள்ள பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam