படியில் இருந்து தவறி விழுந்து இரண்டு வயது குழந்தை பலி
மடுல்ல பிரதேச சபையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டு நிகழ்வில் இரண்டு வயது குழந்தையொன்று படியிலிருந்து தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் நேற்று(21.06.2023) இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வின் போது, மரணக்கிணறு விளையாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட படியிலிருந்து தவறி விழுந்தே குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த குழந்தை பலத்த காயங்களுடன் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




