கொரோனா எதிர்ப்பு மாத்திரையான ”மொல்னுபிராவிரை” இறக்குமதி செய்ய ஜனாதிபதியின் பணிப்புரை
கொவிட்-19 வைரஸ் எதிர்ப்பு மருந்தான (மாத்திரை) மொல்னுபிராவிரை( Molnupiravir) அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மொல்னுபிராவிர் ( Molnupiravir) மாத்திரையை வழங்குவது குறித்து இன்று நடைபெற்ற கோவிட்-19 கட்டுப்பாட்டுக்கான சிறப்புக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன்போதே ஜனாதிபதியினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
Molnupiravir மாத்திரை, அமெரிக்க மருந்து நிறுவனங்களான Merck, Sharp and Dohme (MSD) மற்றும் Ridgeback Biotherapeutics ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. உலகில் கோவிட்-19க்கான முதல் வைரஸ் எதிர்ப்பு மருந்தாக இதுவாக கருதப்படுகிறது.
இது ஊசி மூலம் அல்லது நரம்பு வழியாக கொடுக்கப்படுவதை விட மாத்திரையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
