உக்ரைனின் ஆற்றல் வலையமைப்பு தாக்கி அழிப்பு - மின்சார பயன்பாட்டை குறைக்குமாறு கோரிக்கை
ஆற்றல் வலையமைப்பு மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து உக்ரைன் ஏற்றுமதியை நிறுத்தியதை அடுத்து, விநியோகத்தில் பெரிய பற்றாக்குறை காரணமாக, மால்டோவாவில் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
இதன்படி, சலவை இயந்திரங்கள் மற்றும் பிற வீட்டு மின் உபயோகப் பொருட்களை இயக்குவதையும், மொபைல் போன்கள் போன்ற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்வதை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கிவ்வின் நடவடிக்கையைத் தொடர்ந்து மால்டோவா 50 முதல் 100 மெகாவாட் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக அந்நாட்டின் உள்கட்டமைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ருமேனியா உதவும் என்கிறார் துணைப் பிரதமர்
"உச்ச நேரங்களில் மின்சாரத் தேவை அணுகக்கூடிய உற்பத்தி திறனை மீறுகிறது" என்று மால்டோவன் அமைச்சகம் ஒரு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
மால்டோவாவின் பிரிந்து செல்லும் டிரான்ஸ்நீஸ்ட்ரியா பகுதியில் உள்ள ரஷ்யாவிற்கு சொந்தமான குச்சுர்கன் அனல் மின் நிலையம் (GRES) மால்டோவாவின் மின்சாரத்தில் 70 வீத பங்கு வகிக்கின்றது.
ஆனால் காஸ்ப்ரோம் ஆலைக்கான இயற்கை எரிவாயு விநியோகம் ஒக்டோபர் 1 முதல் 30 வீதம் குறைத்துள்ளது.
அதிகரித்து வரும் கவலையின் மத்தியில், நாட்டின் துணைப் பிரதமர் ஆண்ட்ரே ஸ்பினு, மால்டோவாவின் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க ருமேனியா உதவும் என்று தெரிவித்துள்ளார்.