பிரபல இந்திய நடிகர் மோகன்லால் இலங்கை நாடாளுமன்றத்தில்...
தென்னிந்திய நடிகர் மோகன்லால் இன்று(19.06.2025) இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர்களான மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் படப்பிடிப்பிற்காக கடந்த 15ஆம் திகதி இலங்கை வந்தனர்.
இந்தியாவின் கொச்சியிலிருந்து UL-166 என்ற ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்கவை அவர்கள் வந்தடைந்தனர்.
நட்பான இடம்
'பேட்ரியட்' (Patriot) எனும் திரைப்படத்தின் மூன்று நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக அவர்கள் இலங்கை வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கை படப்பிடிப்புக்கு மிக சிறந்த இடங்களை வழங்குவதோடு வேலை செய்ய மிகவும் நட்பான இடம் என மோகன்லால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மோகன்லால் இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |















16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
