இந்தியாவை விமர்சித்து வசமாக சிக்கிய மொஹமட் அமீர்: பதிலடி கொடுக்கும் ரசிகர்கள்!
டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்திய அணியின் வெற்றி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.
இந்தத் தொடரின் தொடக்கத்தில், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாது என்று மொஹமட் அமீர் கணித்திருந்தார்.
இந்திய அணியின் வெற்றி
ஆனால், சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கம்பீரமாக அரையிறுதிக்குள் நுழைந்து அமீரின் கணிப்பை பொய்யாக்கியுள்ளது.

இதுகுறித்து, பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அமீர், சிம்ரோன் ஹெட்மயர் அவுட் ஆன விதம் சர்ச்சைக்குரியது என்று கூறியுள்ளார்.
பும்ரா வீசிய பந்தில் ஹெட்மயர் அவுட் இல்லை என்றும், அவர் மட்டும் களத்தில் இருந்திருந்தால் மேற்கிந்திய தீவுகள் 220 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருக்கும், இந்தியா வெளியேறியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமீர் மீது எழுந்துள்ள சர்ச்சை
சஞ்சு சாம்சனின் 97 ரன் அதிரடி ஆட்டத்தை "அவரது வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸ்" என்று அமீர் பாராட்டினாலும், இந்திய அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு மோசமாக இருப்பதாக விமர்சித்துள்ளார். "இந்தியா சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை.
பும்ராவைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை வாரி வழங்குகிறார்கள்" என அமீர் குறிப்பிட்டுள்ளார்.

அமீரின் இந்தத் தொடர் விமர்சனங்களை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
வெற்றி பெற்ற அணியை பாராட்டுவதை விட்டுவிட்டு, குறைகளை மட்டுமே தேடுவதாக அமீர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஈரானுக்கு எதிராக போராட தயங்கும் ஸ்டார்மர்.. ட்ரம்பின் சீற்றத்தால் பிரித்தானியாவுடன் ஏற்படும் முறுகல்
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri