நாமலின் லண்டன் உரையாடல் இரத்து:முன்னான் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ள கருத்து
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa கலந்து கொள்ள இருந்த Oxford Union மற்றும் Cambridge Union நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டமை குறித்து, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி Ali Sabry தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆக்ஸ்ஃபோர்ட் Oxford மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் போன்ற விவாத மன்றங்கள் தலைமுறைகள் முழுவதும் தைரியமான உரையாடலுக்கும் தர்க்க ரீதியான கருத்து வெளிப்பாட்டுக்கும் அடையாளங்களாக இருந்து வந்துள்ளது.
பிளவுகளை ஏற்படுத்தும் சம்பவங்கள்
தான் கேம்பிரிட்ஜ் யூனியனில் உரையாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், இத்தகைய மேடைகள் திறந்த மனப்பான்மையுடன், பரஸ்பர மரியாதையுடனும் அறிவாற்றல் நேர்மையுடனும் கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ள அரிதான வாய்ப்புகளை வழங்குகின்றன.
ஒழுங்குபடுத்தப்பட்ட சில குழுக்களின் அழுத்தம் காரணமாக இந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் குடியியல் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இலங்கையின் எதிர்காலத்திற்கும் உண்மையான நல்லிணக்கத்திற்கும் இத்தகைய சம்பவங்கள் தடையாக அமைகின்றன.
முரண்பட்ட கருத்துக்களை கொண்டவர்களை சந்திக்கவும், கேள்வி எழுப்பவும், அவர்களைக் கேட்கவும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்து வேறுபாடுகளைக் கொண்ட குரல்களை மௌனிக்க வைப்பதன் மூலம் ஜனநாயகம் முன்னேற்றமடையாது. பல்கலைக்கழகங்கள் பாதுகாக்க விரும்பும் உயர்ந்த இலக்குகளை அது பாதிக்கக்கூடும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.